கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள பேவாட்ச்சின் மாயாபுரி மெழுகு அருங்காட்சியகத்தில் பிரபல நடிகர் விஜய் யின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் சார்லி சாப்ளின், அப்துல் கலாம், மைக்கேல் ஜாக்சன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, ரவீந்திரநாத் தாகூர், மதர் தெரசா என பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் ஏற்கனவே இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.
தமிழ் நடிகருக்கு மெழுகுச்சிலை என்பது இதுவே முதல்முறை. அதுவும் நடிகர் விஜய் என்பதால் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மதர் தெரசா போன்ற பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று விஜய்யின் மெழுகு சிலை விஜய் மக்கள் இயக்க ரசிகர்களால் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தற்போது, விஜய்யின் மெழுகு சிலையை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிப்பதோடு, அதனுடன் புகைப்படம் எடுத்து கொண்டு வருகின்றனர்.