ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே வேலையை செய்யும் நிரந்தர ஊழியர்களுக்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும்.தொடர்ச்சியாக இருக்கும் பணிகளுக்கு தினசரி ஊதிய அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. நிரந்தர தொழிலாளர்களின் வேலையும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலையும் வெவ்வேறாக இருந்தால் ஊதியம் தொடர்பான விதிமுறைகளையே கடைபிடிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் இனி நிரந்தர தொழிலாளர்களின் பணிக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.