பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய வசதிகள்

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நவீன ரோந்து வாகனங்கள், பெண்களின் பாதுகாப்பிற்காக  வாட்ஸ் அப் எண் உள்ளிட்ட புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவல் துறையினரின் ரோந்துப் பணிகளை எளிமையாக்கும் விதமாக நவீன உபகரணங்கள் பொருத்தப்பட்ட நவீன ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இரண்டு சக்கரங்கள் கொண்ட இந்த நவீன ரோந்து வாகனம் 360 டிகிரி சுழலக்கூடியது,
சைரன் அலராம் உள்ளிட்ட  பல நவீன வசதிகளை கொண்டுள்ளது, முதற்கட்டமாக மூன்று
வாகனங்கள் மெரினா கடற்கரை சாலையில் ரோந்து பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
 
அதே போல பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல்வேறு
புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது போக்குவரத்து பெண்கள் தனிப்படை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
 
இந்த தனிப்படையில்  ஒரு பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தலைமை காவலர்,
இரண்டு காவலர்கள் கொண்ட  தனிப்படை 4 மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
 
இவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியில் ஈடுபட உள்ளனர், அதுமட்டுமின்றி முக்கியமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை
சோதனை செய்யும் பணயில் ஈடுபட உள்ளனர்.
பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இருந்துவரும் நிலையில், போக்குவரத்து
காவல் துறை சார்பில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்க ஒன்றாகவே உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு பாதுகப்பற்ற சுழலை எப்போது எல்லாம் உணர்கிறார்களோ அப்போது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புதிய வசதியினை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் 7530001100 என்ற எண்ணிலும் dccwx. chennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் www.facebook.com/chennai.police முகநூல் பக்கத்திலும் புகார் தெரிவிக்கலாம்.

பெண்களின் நலன் கருதி

* பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலை

உணர்ந்தால் தகவல் அளிக்க காவல்துறையின் புதிய வசதி

* வாட்ஸ் அப் : 7530001100

* இ-மெயில் : dccwx.chennai@gmail.com

* முகநூல் : www.facebook.com/chennai.police

Exit mobile version