அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு, தமிழக மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து, எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் இடம்கொடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக இருப்பதற்கு, அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். சாதி, மத பூசல்கள் இன்றி, அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து, மத நல்லிணக்கத்தை பேணி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக தமிழக அரசு பராமரித்து வருவதாகவும் தனது அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.