நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கடந்த 7மாதகாலமாக தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்த 6பேர் கொண்ட
கும்பலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கவல்துறையினர் கைது செய்தனர்…
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கடந்த 7மாதகாலமாக, தனியாக நிற்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து லாவகமாக அவர்களிடம் கொள்ளை அடிப்பது தொடர்ந்து வாடிக்கையாகி வந்தது. இரவில் தனியாக நின்றிருப்பவர் கைப்பையை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து செல்வது,
இரவு நேரத்தில் கையில் வைத்து செல்போனை பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது இரண்டு சக்கர வாகனத்தில் மெதுவாக அருகில் வந்து செல்போனை பறித்து கொண்டு செல்வது போன்ற வழிப்பறி சம்பவங்கள் வாடிக்கையாக இருந்தது.
இதனையடுத்து, வழிபறி சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மயிலாடுதுறை அடுத்த மணக்குடி பகுதியை சார்ந்த 6பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்தது.இந்த கும்பலை, இருக்கும் இடத்தை கண்டுபிடித்த தனிப்படை, உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவல்துறையினர் நேற்று வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த செல்போன்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். கொள்ளையர்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
சிறையிலடைக்கப்பட்டனர்.