இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 3 விக்கெட்டுகளை இழந்தது

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் ஷர்மா மயங்க் அகர்வால் இணை முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா, 176 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைதொடர்ந்து களம் இறங்கிய இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மறுமுனையில் சிறப்பாக அடி இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் 215 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்டுகளை இழந்து 502 ரன்கள் குவித்த இந்தியா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

Exit mobile version