தமிழக அரசுக்கு வரும் ஜனவரி மாதம் 27ந் தேதி நன்றி அறிவிப்பு மாநாடு

ராமசாமி படையாட்சியாருக்கு மணிமண்டபம் அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு வரும் ஜனவரி மாதம் 27ந் தேதி நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தப்படும் என ராமசாமி படையாட்சியாரின் மகன் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டிற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை அழைக்க இருப்பதாகவும், மாநாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழக அரசு வன்னியர் பொதுசொத்து நலவாரியம் அமைத்தது, அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தது, சட்டமன்றத்தில் ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை திறந்தது போன்ற தமிழக அரசின் சீரிய நடவடிக்கைகளுக்காக தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். இதற்காக தமிழக அரசுக்கு நன்றி அறிவிக்கும் மாநாட்டை கடலூரில் ஜனவரி 27ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.

Exit mobile version