முதல் முறையாக பாடல் பாடிய திமிங்கிலங்கள்: வெளியான வீடியோ ஆதாரம்

உலக வரலாற்றில் முதன்முறையாக திமிங்கிலங்கள் பாடும் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்து இருக்கிறார்கள் கடல் உயிரியலாளர்கள். அழிவின் விளிம்பில் உள்ள வலது திமிங்கிலங்களின் பாடல் குறித்துப் பார்ப்போம்.

டால்பின்கள் மற்றும் திமிங்கிலங்கள் ஆகியவை கடலில் வாழ்ந்தாலும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. முன்னர் நிலத்தில் வாழ்ந்து பின்னர் நீருக்கு இடம் பெயர்ந்தவை. இதனால் அவற்றால் ஓசைகளை எழுப்ப முடியும். குறிப்பாக திமிங்கிலங்கள் அழுகை சத்தம், கூக்குரல் சத்தம், முனகும் சத்தம் ஏன் துப்பாக்கி சுடுவது போன்ற சத்தத்தையும் அவ்வப்போது எழுப்பக் கூடியவை என்பது அறிவியலாளர்கள் அறிந்ததே.

ஆனால் திமிங்கிலங்களில் ஒரு வகையான வலது திமிங்கிலங்கள் ஒரே சந்ததில் சீரான ஓசைகளை எழுப்பிப் பாடும் என்பது, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நோவா ஆய்வு அமைப்பின் அமைப்பின் அறிவியலாளர்களால் இப்போதுதான் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டு உள்ளது.

வலது திமிங்கிலங்கள் அல்லது கருப்புத் திமிங்கிலங்கள் என்பவை உலகில் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்று. மிக மெதுவாகவே எதிர்வினையாற்றக் கூடியவை என்பதால் 20ஆம் நூற்றாண்டில் இவை வேட்டைக்கு எளிய இலக்காகின. இப்போது உலகெங்கும் மொத்தம் 30 வலது திமிங்கிலங்கள் மட்டுமே உள்ளன. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய்வையாக இருந்தது இல்லை.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டில், கடலில் துப்பாக்கிச் சூட்டின் ஒலியுடன் கூடிய பாடல்கள் இசைக்கப்படுவதைக் கண்ட அறிவியலாளர்கள் அதனை 8 ஆண்டுகளாக ஆராய்ந்த பின்னர்தான், அவற்றை இசைப்பது வலது திமிங்கிலங்கள் என்று கண்டு பிடித்தனர். பின்னர், பல மாதங்களாக வலது திமிங்கிலங்களைப் பின் தொடர்ந்த நிலையில் இப்போதுதான் ஒரு முழுப்பாடல் அவர்களுக்குக் கிடைத்து உள்ளது.

திமிங்கிலங்கள் பாடும் – என்ற செய்தி உயிரினங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. வலது திமிங்கிலம் அந்தப் பாடலை யாருக்காகப் பாடுகின்றது? அது செய்திப் பரிமாற்றமா? இணைக்கான அழைப்பா? அதில் துப்பாக்கியின் ஓசையை அதிகம் பயன்படுத்துவது ஏன்? – என்பதையெல்லாம் இப்போது அறிவியலாளர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.

கடலின் அற்புதங்களில் ஒரு சதவிகிதத்தைக் கூட மனிதர்கள் இதுவரை அறிந்தது இல்லை – என்பதற்கு இன்னொரு ஆதாரமாக உள்ளது இந்தக் கண்டுபிடிப்பு. இதன் மூலம் வலது திமிங்கிலங்கள் காக்கப்பட்டால் மகிழ்ச்சி – என்கின்றனர் கடல் உயிரின ஆர்வலர்கள்.

 

திமிங்கிலத்தின் பாடல் ஆடியோ: https://www.youtube.com/watch?v=61QBYAiLT_w

Exit mobile version