ஜல்லிக்கட்டில் முதல்முறையாக மாடு பிடி வீரர்களுக்கு காப்பீடு வசதி

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் மாடு பிடி வீரர்களுக்கான காப்பீடு வசதி முதன்முறையாக, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பிரதமரின் சுரக்ஸா யோஜனா திட்டத்தின் கீழ் 12 ரூபாய்க்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் 300 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடுகள் செய்யப்படுகின்றன. இதில் மாடுபிடி வீரர்கள் தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் வசதியும், விபத்தில் மாடுபிடி வீரர் பாதிக்கப்பட்டால் அவரது வங்கி கணக்கில் பணத்தை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. காப்பீடு வசதியுடன் மாடுபிடி வீரர்களுக்கு இதய துடிப்பு, உயரம், எடை பரிசோதனையை மருத்துவர்கள் குழுவினர் செய்தனர். காப்பீடு வசதி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாடு பிடி வீரர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version