தமிழகத்தில் முதன்முறையாக ரூ. 2 கோடி செலவில் சோலார் மின் திட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இரும்பை கிராமத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் மின் திட்டத்தை தமிழக அரசு துவங்க உள்ளது. அது பற்றிய சிறிய செய்தி தொகுப்பு

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா இரும்பை கிராமத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக சுமார் 4 ஆயிரம் சதுரஅடியில் சோலார் மின் திட்டத்தை தமிழக அரசு துவங்க உள்ளது. சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் கீழ் இரும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு தடையில்லாத மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் புதுபிக்கதக்க எரிசக்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவும் உள்ளது. கிராமத்தின் உண்மையான மின் தேவையில் 150% மின் தேவையினை உற்பத்தி செய்ய இந்த அலகு வடிவமைக்கபட உள்ளது. மேலும் வரும் காலங்களில் ஏற்படும் வளர்ச்சி மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு இதனை மேம்படுத்தி கொள்ளவும் முடியும்.

Exit mobile version