புதுச்சேரி அரசில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துணை நிலை ஆளுநர் செயல்படவிடாமல் தடுப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டினார். இதேபோல் நாராயணசாமி தலைமையிலான அரசு முறையாக செயல்படவில்லை என்றும் பதிலுக்கு துணை நிலை ஆளுநர் சுட்டிக் காட்டினார். இதனிடையே புதுச்சேரி அரசில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வழக்கு தொடுத்தார். அதன் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.