டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் -இந்தியத் தேர்தல் ஆணையம்

டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

டெல்லி சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை தேர்தல், ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 8ந் தேதி நடைபெறும் என  தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.  வேட்புமனு தாக்கல் ஜனவரி மாதம் 14ந் தேதி முதல் தொடங்கும் எனவும், பிப்ரவரி மாதம் 11ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version