சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சந்திரயான் 3 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் சிவன் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு ஏவியது உட்படக் கடந்த ஆண்டில் இஸ்ரோ செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு ஏவுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஆண்டில் சந்திரயான் 3 திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட உள்ள ககன்யான் திட்டத்துக்காக 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்குப் பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரத்தில் தொடங்கும் எனவும் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.

Exit mobile version