நாகை அருகே காவல் ஆய்வாளர் ஒருவர் தெருநாய்களுக்கு தினமும் உணவளித்து அவற்றின் அன்பை பரிசாக பெறுகிறார். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
நாகை மாவட்டம், நாகூர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராதாகிருஷ்ணன் தெருநாய்கள் உள்ளிட்ட விலங்குகளிடத்தில் அதிக பாசம் காட்டுவது கவனத்தை ஈர்த்துள்ளது..
இவர் தினந்தோறும் நாய்களுக்கு உணவளித்து, அவற்றுடன் தன் அன்பை பரிமாறிக் கொள்கிறார்.. தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க, யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவதை விட, இதுபோல ஜீவ காருண்யத்தில் கவனம் செலுத்துவது அதிக பலனை தரும் என்கிறார் இந்த காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்….