தமிழகத்துக்கு வந்தது கிருஷ்ணா நதிநீர்

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தடைந்தது. இந்த நீரினை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மலர்தூவி வரவேற்றார்.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் ஆண்டு தோறும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்டலேறு அணையில் போதிய நீர் இல்லாததால் நீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி ஆந்திர அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து கிருஷ்ணா நதி நீரை திறந்துவிடக் கோரி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை திறந்த விடப்பட்ட கிருஷ்ணா நீர், 152 கிலோ மீட்டர் தூரம் பயணித்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயின்ட்டை கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.

Exit mobile version