பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு வித்தியாசமான தண்டனை

நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கியது பலரது பாராட்டை பெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் அதிக அளவு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நியூஸ் ஜெ செய்தி சேனலில் செய்தி ஒலிபரப்பப்பட்டது.இதன் எதிரொலியாக அக்கடைகளில் சோதனை நடத்திய மாவட்ட ஆட்சியர், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை அதிரடியாக பறிமுதல் செய்தார். அபராதம் விதிப்பதற்கு பதிலாக கடை உரிமையாளர்களின் கைகளால் அங்கிருந்த பயணிகளுக்கு திண்பண்டங்களை இலவசமாக அவர் வழங்கச் செய்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

Exit mobile version