தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சொத்துக்காக கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்த சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி தாண்ட உடையார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மாரண்டஹள்ளியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் நிர்வாகியாக உள்ளார் சுமார் 10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் இவரின் தாய் மாமன் தர்மபுரி மாவட்டம் ஒட்டப்ட்டி பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கும் இடையில் சொத்து விவகாரத்தில் பிரச்சினை இருந்து வந்தது. இதனையடுத்து இருவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் நீதிமன்றம் வெங்கடேசனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதால் துரைராஜ் வெங்கடேசனை கொலை செய்துவிட்டால் 10 கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றி விடலாம் என எண்ணி கூலிப்படை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதேபோல் கடந்த மாதம் 19ம் தேதி இரவு மாரண்டஹள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் வெங்கடேசன் மோட்டார் சைக்கிள்ளில் வரும் போது இரவு நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனை வெட்டி விட்டு தப்பி ஓடினர். வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த வெங்கடேசனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் வெங்கடேசன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக மாரண்டஅள்ளி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இவ்வழக்கில் துரைராஜ் அவரது மகன் கணேசமூர்த்தி. மேலும் மாரண்டஅள்ளி காந்தி நகரை சேர்ந்த நகரை கெளரவன் மகன் காந்தி, பெரியண்ணன், சந்துரு , முருகன் மகன்வெற்றிவேல், உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் இவர்கள் கொலைக்கு பயன்படுத்திய பயங்கர அரிவாளை மாரன்டஅள்ளி காவல் துறையினர் கைப்பற்றினர்.