சென்னையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இது குறித்து வந்த ரகசிய தகவலின் படி, அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர், கொளத்தூரைச் சேர்ந்த வசந்த், நிஷாந்த்,பாலச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 6லட்ச ரூபாய் மதிப்பிலான 300 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் மற்றும் மாத்திரை வடிவிலான போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கஞ்சாவை ஆந்திராவிலிருந்தும், மாத்திரைகளை இணையதளம் மூலமாகவும், மெத்தாபிட்டமைன் என்ற போதைப் பொருளை பர்மா மற்றும் பங்களாதேசத்தில் இருந்து வாங்கி விற்பனை செய்தது அம்பலமானது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக மாணவர்கள் தான் அதிக அளவில் போதைமருந்துகளை பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.