சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த செவிலியர் மாணவர்களுக்கு, உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டி, அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரியில் செவிலியர் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு 5 மாத பணி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அவர்கள் அனைவரும் கொரோனா சிகிச்சை பிரிவில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் விடுதியில் உள்ள தனி அறையில் தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும், மற்ற மாணவிகளுக்கும் கொரோனா தொற்று பரவும் நிலை உள்ளதாக குற்றம்சாட்டினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புகார் அளித்த அவர்கள், கொரோனா வார்டில் பணியாற்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குறைகூறினர்.