FASTag-ல் இணையாத வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் என உத்தரவு

‘பாஸ்டேக்’ (FASTag) திட்டத்தில் இணையாமல், சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ வழியை பயன்படுத்தும் வாகனங்கள் வரும் 1-ம் தேதி முதல் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக வாகனங்கள் கடந்து செல்ல ‘பாஸ்டேக்’ (FASTag) எனப்படும் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு சுங்கச்சாவடிகளில் ஒரு ‘பாஸ்டேக்’ வழி உள்ளது. வாகன ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை காண்பித்து தனி பயன்பாட்டு குறியீட்டை பெறலாம்.

ஆன்லைன் மூலம் ‘பாஸ்டேக்’ (FASTag) ரீசார்ஜ் செய்யலாம். வாகன உரிமையாளர் சுங்கச்சாவடியை எத்தனை முறை கடந்து சென்றாலும் அதற்கு ஏற்றார்போல், கட்டணம் கழித்து கொள்ளப்படும். இந்த முறையை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் விரைவாக வாகன ஓட்டிகள் செல்லலாம்.

இந்த நிலையில், இந்த திட்டத்தில் இணையாமல், ‘பாஸ்டேக்’ (FASTag) வழியை வாகனங்கள் பன்படுத்துவதை தடுக்க அதிக கட்டணம் வசூலிக்க தேசிய  நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘பாஸ்டேக்’ (FASTag) திட்டத்தில் இணையாமல், ‘பாஸ்டேக்’ வழியை பயன்படுத்தும் வாகனங்கள் டிசம்பர் ஒன்று முதல் இரண்டு மடக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

Exit mobile version