பணத்திற்காக சொந்த மாமியாரை கடத்திய மருமகள்

சென்னை அயனாவரத்தில் சொத்துக்காக மாமியாரை கடத்திய வழக்கில் கூலிப்படையை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கணவன் மற்றும் மகன் இறந்த நிலையில் யாரும் இல்லாத சூழ்நிலையில் சென்னை அயனாவரத்தில் உறவினர் வீட்டில் வாழ்ந்து வருபவர் 65 வயதான பத்மினி. இவருடைய மருமகள் மேனகா. மேனகாவின் கணவர் காணாமல் போன நிலையில். மாமியார் பத்மினியின் வசம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மருமகள் மேனகா எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்தில். கடந்த 18ம் தேதி கூலிப்படையினருடன் காரில் வந்த மேனகா துப்பாக்கி முனையில் மாமியாரை கடத்தி சென்றார்.

இதுகுறித்து பத்மினி உறவினர் அமுதா கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் மாமியார் பத்மினியை பத்திரமாக மீட்டனர். பத்மினி கொடுத்த தகவலின்படி மருமகள் மேனகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மேனகா உடன் காரில் வந்த கூலிப்படை தலைவன் ராஜேஷ்கண்ணா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தநிலையில் நேற்று அசோக் நகர் பகுதியில்
இருந்த ஜேம்ஸ், அவரது தம்பி அன்புரோஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி போலி பதிவு எண் கொண்ட காரில் துப்பாக்கியுடன் சுற்றி திரியும் கூலிப்படை தலைவன் ராஜேஷ்கண்ணாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version