மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 116 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 116 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததாலும், மேட்டுர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 127 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 116 கன அடியாக குறைந்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 106.76 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 73.88 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரத்து 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 

Exit mobile version