மருத்துவ ஆராய்ச்சிக்காக 2 வயது குழந்தை உடலை ஓப்படைத்த பெற்றோர்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபராக வளம் வருபவர் சாத்னம் சிங் சாப்ரா. இவரது 2 வயது மகள் ஆசீஸ் கவுர் சாப்ராவுக்கு சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை சரி இல்லாமல் போனது அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அரியவகை நோய் ஒன்றினால் தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்தது.

பின்பு எந்த சிகிச்சையினாலும் குழந்தையை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதன்பிறகு உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஆசீஸ் கவுர் சாப்ராவின் உடலை பெற்றோர் ஆராய்ச்சிக்காக மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

இதுபற்றி சாத்னம் சிங் கூறுகையில்,  “எங்களுடைய மகளின் உடலை ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக மருத்துவமனைக்கு கொடுத்துள்ளோம்.வேறு எந்த குழந்தையும் இந்த நோயினால் பாதிக்கப்படக் கூடாது. அப்படி பாதிக்கப்பட்டாலும், எனது மகள் உடலை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு இந்த நோய்க்கு தீர்வு காண வேண்டும். எங்கள் மகளின் கண்களும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன” என கூறியுள்ளார்.

Exit mobile version