நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
நீதித்துறையின் இரு கண்களாக விளங்கும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கிடையே நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி தலைமையிலான 11 பேர் கொண்ட நீதிபதிகள் அணியும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமையிலான 11பேர் கொண்ட வழக்கறிஞர்கள் அணியும் களத்தில் மோதியது. நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்ட இந்த போட்டியில், நீதிபதிகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.