வங்கிகள் இணைப்புக்கு எதிர்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி சங்கங்கள் அறிவிப்பு

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 4 சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, பண பரிவர்த்தனை சேவை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. அதன்படி வரும் 26 மற்றும் 27 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி அதிகாரிகள் சங்கங்ள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதனிடையே, வரும் 28ந் தேதி 4வது சனிக்கிழமை மற்றும் 29ஆம் ஞாயிறு வார விடுமுறை என்பதால் வங்கி அதிகாரிகள் போராட்ட அறிவிப்பால், 4 நாட்களுக்கு வங்கி சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version