நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி விட்ட ரஜினிகாந்த்!

பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான படம் ’மாகாநடி’. இந்த படத்தில் சாவித்ரி கதாப்பாத்திரம்மாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அவரது நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது தற்போது அவருக்கு வழங்கப்பட்டது.

டெல்லியில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதினை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்த்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு தலைவர் 168 பட குழுவினர் வாழ்த்துக்கள் தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர். இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவ ரஜினி ரசிகர்களும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெறிக்க விடுகின்றனர்.

Exit mobile version