கல்வித்துறைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 28 ஆயிரத்து 957 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் பட்டய கணக்காளர் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு, வெளிநாட்டு மருத்துவர்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அடுத்த வாரத்தில் இருந்து மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.