கிருஷ்ணகிரி அருகே, முதுமையால் இறந்த குரங்கிற்கு மனிதர்களை போல ஈம சடங்கு செய்து கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.
பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு ஒன்று வந்துள்ளது. இந்த குரங்கு பொதுமக்களுக்கு எந்த இடையூறும் செய்யததால், கிராம மக்கள் அதற்கு உணவு அளித்து வளர்த்து வந்தனர். அந்த கிராமத்தை விட்டு வெளியில் செல்லாத குரங்கு, முதுமை காரணமாக திடீரென இறந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி, மனிதர்களுக்கு செய்வது போன்று, குரங்கிற்கும் மாலை அணிவித்து ஈம சடங்குகளை நடத்தினர். பின்னர் அப்பகுதியில் ஒரு குழி தோண்டி இறந்த குரங்கின் சடலத்தை புதைத்தனர். 4 ஆண்டுகளாக கிராமத்தின் செல்ல பிராணியாக இருந்து வந்த குரங்கு, இறந்தது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.