உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறையை உடனே துவங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறையை உடனே துவங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.