80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தபால் ஓட்டு

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடும் வகையில் தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க தபால் ஓட்டு வழங்கப்பட உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு போட அனுமதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அதன் அடிப்படையில் அவர்கள் தபால் ஓட்டு போட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version