20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக உச்சநீதிமன்றம் வேதனை

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாக உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த விபரங்கள், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. இதில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஏற்கனவே ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு, அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், எங்கோ சிஸ்டம் செயல் இழந்து விட்டதைத்தான் இது காட்டுகிறது என்றும் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

Exit mobile version