12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைந்துபோன இளைஞர் ஃபேஸ்புக் மூலம் கண்டுபிடிப்பு

தென்காசி அருகே 12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைந்துபோன இளைஞரை ஃபேஸ்புக் மூலம் கண்டறிந்து பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் சார்பில் 100 நாட்கள் கருணை பயணம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி பகுதியில் ஆதரவற்று சாலையோரம் சுற்றித் திரிந்த நபரை சுத்தம் செய்த அந்த அமைப்பினர், பின்னர் அந்த புகைப்படத்தை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர். இதனைப் பார்த்த வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தனது மகன் ஐயப்பன் என்றும் 12 வருடங்களுக்கு முன்பு மனநலம் சரியில்லாத நிலையில் குடும்பத்தை விட்டு வழிதவறி சென்றுவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து, தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் மனிதம் விதைப்போம் அறக்கட்டளையின் உதவியுடன் காவல்துறையினர் மூலம், ஐயப்பன் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version