திருச்செந்தூர் அருகே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் கோப்பையை காயல்பட்டினம் அணி கைப்பற்றியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த புன்னக்காயலில் புனித ஜோசப் கால்பந்தாட்ட கழகம் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடத்தப்படுகிறது. 46வது ஆண்டாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இருந்து 11 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் தூத்துக்குடி அணியும் காயல்பட்டினம் அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து காயல்பட்டினம் அணிக்கு கோப்பை வழங்கி பாராட்டினர்.