ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன. வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் என்ற பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலையின் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காலணி உதிரிபாகங்கள் தீயில் எரிந்தன. மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 2 குடோன்களிலும் பரவியது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 75 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version