கோவை பகுதியில் பழக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை உக்கடம் பகுதியில் உள்ள பழக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்

உக்கடம் வைசியாள் வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், கோவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் பல்வேறு கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாம்பழங்கள் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கார்பைடு மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்

Exit mobile version