கோயம்பேடு காய்கனி அங்காடியில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இயற்கையான முறையில் பழுத்த பழங்கள்தான் உடலுக்கு நல்லது என்பது தெரிந்தும் ஒரு சில வியாபாரிகள் விரைவாக அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கில் கார்பைடு கற்கள் உள்ளிட்டவைகள் மூலம் பழங்களை பழுக்க வைப்பதாக புகார் எழுகிறது. இந்தநிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். சோதனையில், எத்திலீன் பவுடரை பழங்களின் மீது நேரடியாக வைத்து, பழங்களை பழுக்க வைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 4 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எத்திலீன் பவுடரை பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, பழங்களின் மீது நேரடியாக படாத வகையில் வைத்து பழுக்க வைக்க வேண்டுமே தவிர, எத்திலீன் பவுடரை நேரடியாக பழங்களின் மீது வைத்து பழுக்க வைக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version