அம்மா உணவகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு!!!

நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் தேவைக்கேற்ப அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அம்மா உணவகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் தேவைக்கேற்ப நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version