திருவண்ணாமலையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவு திருவிழா

திருவண்ணாமலையில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவு திருவிழாவில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த இந்த விழாவில், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் வழி நடத்துனர்கள் கலந்து கொணடனர். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவில், பாரம்பரியமிக்க உணவு வகைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இதில், ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Exit mobile version