சென்னை ஐ.ஐ.டியில் சர்வதேச மாணவர்களின் உணவுத் திருவிழா கொண்டாட்டம்

சென்னை ஐ.ஐ.டியில் நடந்த சர்வதேச மாணவர்களின் உணவுத் திருவிழா பல்வேறு நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.

சென்னை ஐ.ஐ.டியில் இந்திய மாணவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களும் மேற்படிப்பு பயின்று வருகின்றனர். இவர்களது கலாச்சார பழக்க வழக்கத்தை இந்திய மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆண்டுதோறும் சர்வதேச நாள் ஐ.ஐ.டி வளாகத்தில் கொண்டாடப்படுகிறது.

அதன்படி கொண்டாடப்பட்ட விழாவில் போர்ச்சுகல், ஜப்பான், பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் நாட்டின் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தினார்கள். இந்திய மாணவர்கள் ஆர்வமுடன் இந்த உணவுத் திருவிழாவில் கலந்துகொண்டு உணவுகளை ருசித்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் கலாச்சாரம், பழக்க வழக்கங்களை இந்திய மாணவர்களுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த சர்வதேச நாள் கொண்டாடப்படுகிறது என்று சென்னை ஐ.ஐ.டியின் சர்வதேச உறவுகள் துறை தலைவர் மகேஷ் தெரிவித்தார்.

Exit mobile version