கனமழையை தொடர்ந்து புழல் ஏரி முழு கொள்ளவை எட்டவுள்ளது!

கனமழையால் புழல் ஏரி முழு கொள்ளவை எட்டவுள்ள நிலையில், கரையோர பகுதியிலுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி 20 கன அடியை எட்டியுள்ளதால், இன்று மாலை ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் புழல் ஏரியை சுற்றியுள்ள வடகரை, கிராண்ட் லைன், புழல், வட பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version