பங்குசந்தை நேற்றும் உயர்ந்து தொடர்ந்து 7வது நாளாக ஏற்றம் கண்டது. இதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தையின் இறுதியில் நேற்று 137 புள்ளிகள் அதிகரித்து 36 ஆயிரத்து 484 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் நிப்டி 58 புள்ளிகள் அதிகரித்து 10 ஆயிரத்து 967 புள்ளிகளாக இருந்தது. கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவது காரணமாக கூறப்படுகிறது. மேலும் ரிசர்வ் வங்கி நடப்பு டிசம்பர் மாதத்தில் வெளிசந்தைகள் நடவடிக்கையின் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பணப்புழக்கதை அதிகரிக்க முடிவு செய்வதும் பங்கு வர்த்தகம் உயர்வுக்கு காரணமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவால் விமான சேவை பங்குகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 4 காசுகள் உயர்ந்து 70 ரூபாய் 40 காசுகளாக உள்ளது.