சிதம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், அவர் பேச ஆரம்பித்ததும் கட்சி தொண்டர்களே வெளியேறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். தாரை தப்பட்டையுடன் நடந்த கலை நிகழ்ச்சியை காண கூட்டம் கூடியது. பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி பேச ஆரம்பித்ததும் கூட்டம் கலைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாதி பேர் சென்றுவிட்டதால், காலி நாற்காலிகள் மட்டுமே காட்சியளித்தன.
கூட்டம் கலைந்ததால் பாதியிலேயே தனது பேச்சை முடித்துக் கொண்டு உதயநிதி கிளம்ப முயன்றார். அப்போது மேடை முன் கூடியிருந்த தொண்டர்கள் சிலர் கோரிக்கை மனுக்களை வழங்க முயற்சித்தனர். ஆனால் கைகுலுக்குவதிலேயே உதயநிதி குறியாக இருந்ததால், விரக்தியடைந்த தொண்டர் ஒருவர், தனது மனுவை உதயநிதியின் முகத்தில் வீசியெறிந்தால். இதனால் கோபமடைந்த உதயநிதி உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.