ஆண்டிப்பட்டியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி வைகை அணை,ஆண்டிப்பட்டி, கண்டமனூர், ராஜதானி, ஏத்தக் கோவில், கடமலைகுண்டு, மயிலாடும்பாறை, பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் வாகன சோதனையும் நடைபெற்றது. 

Exit mobile version