தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக பறக்கும் படை

உள்ளாட்சித் தேர்தலை கண்காணிக்க முதன்முறையாக பறக்கும் படையை அமைத்து, தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்சி அடிப்படையில் மற்றும் கட்சி அடிப்படை அல்லாமல் நடைபெற உள்ள தேர்தல்களில், மக்கள் பாதுகாப்பான முறையில் வாக்களிக்க, மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் இணையதளம் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களுக்கு, மூன்று பறக்கும்படை வீதம், முதன்மை பொறுப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை, பறக்கும் படையானது, அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும்.

Exit mobile version