லண்டனில் வானில் பறந்த “Justice for kashmir" பேனர்

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் நிலையில் இன்றைய போட்டிகளில் இந்தியா-இலங்கை, ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் இந்தியா- இலங்கை போட்டியின் போது திடீரென மைதானத்தை சுற்றி சிறிய ரக விமானம் ஒன்று வட்டமடித்தது. அதன் பின்பகுதியில் “Justice for kashmir”, “India stop genocide & free Kashmir” என்ற வாசகங்கள் கொண்ட பேனர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது முறையாக இத்தகைய சம்பவங்கள் நிகழந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போட்டியின் போது ‘Justice for Balochistan’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பேனர் கொண்ட விமானம் இதே மைதானத்தின் மீது பறந்தது. இதனால் இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் மீண்டும் இத்தகைய வாசங்கள் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டதற்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கிரிக்கெட்டில் ஒருபோதும் அரசியல் புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version