பிகில் பட இசை வெளியீட்டு விழாவில், பூ வியாபாரிகளை தரக் குறைவாக பேசிய நடிகர் விஜய்க்கு எதிராக பூ வியாபாரிகள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்..
‘பிகில்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் “பூக்கடைக்காரனை பட்டாசு கடையில் வேலைக்கு வச்சா, பட்டாசு மேல தண்ணீர் தெளிச்சுடுவான் என்று பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. மேலும் இந்த வசனம் பட்டிமன்ற பேச்சாளர், பேசியதை விஜய் காப்பியடித்து பேசியுள்ளார், என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து தமிழக பூ வியாபாரிகள், விஜய் பேசியது எங்கள் மனதை காயப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். மன்னிப்பு கேட்காவிட்டால் விஜய்க்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும், பிகில் படத்தை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்..