கோவையில் மகாக்காளியம்மன் கோவில் கத்திப்போடும் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் தங்கள் உடலில் கத்தியால் வெட்டிகொண்டே, ரத்தம் சொட்டச் சொட்ட ஊர்வலமாக சென்றனர்.
கோவை பூமார்க்கெட்டில் உள்ள மகாக்காளியம்மன் கத்திப்போடும் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் அம்மனை அழைப்பதற்காக, நெசவாளர் காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலாமாக வந்தனர்.
மேலும், ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் “வேஸ்க்கோ… தீஸ்க்கோ…” என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் தங்கள் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.
கத்தியால் வெட்டப்பட்ட பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்தோட, அதை எல்லாம் அவர்கள் பொருட்படுத்தாத பக்தர்கள், அந்த வெட்டுக் காயங்களின் மீது, திருமஞ்சன மஞ்சள்ப் பொடியை ஒற்றி வைத்துக் கொண்டு, தொடர்ந்து “வேஸ்க்கோ…தீஸ்க்கோ…” என்று பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் சென்றனர். வெட்டுக்காயங்களில், இந்தப் திரு மஞ்சள் பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்று இந்த பக்தர்கள் நம்புகின்றனர்.
பின்னர், அந்த ஊர்வலம் பூ மார்க்கெட் மாகாளியம்மன் கோவிலில் சென்று முடிவடைந்தது. பின்னர் அம்மனுக்கு விசேஷ பூஜைநடத்தப்பட்டதைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெற்றது.