நீலகிரியில் சீசனை முன்னிட்டு பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்

நீலகிரியில் இரண்டாம் பருவ காலத்தை முன்னிட்டு பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஜப்பான் நாட்டின் தேசிய மலரான செர்ரி மலர்கள் பூத்து குலுங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான குளிர் காலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செர்ரி மரத்தின் பூக்கள் பூத்து குலுங்க தொடங்கி உள்ளன.

இந்த மரங்கள் பூக்களை பூக்க தொடங்கியதும் அதன் அனைத்து இலைகளும் உதிர்ந்து இளஞ்சிவப்பு நிறத்தில் லட்சக்கணக்கான மலர்கள் பூத்து காட்சியளிக்கும். உதகையில் இரண்டாம் பருவ காலத்தை வரவேற்கும் வகையில் பூத்து குலுங்க தொடங்கி உள்ள இந்த செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

Exit mobile version