திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு

திண்டுக்கல் பூ சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பூக்கள் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆவணி மாதம் மங்கல நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம்  ரூபாய் 200 முதல் 300வரைவிற்பனையான மல்லிகைப் பூ இன்று ரூபாய் 700க்கும், கனகாம்பரம் பூ ரூபாய் 600க்கும் விற்பனையானது. இதேபோல சம்பங்கி ரூபாய் 300க்கும் ரோஜா ரூபாய் 220க்கும் விற்பனையானது. இதன் காரணமாக பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version