கனமழை,நிலச்சரிவிற்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மலர் கண்காட்சி

மூணாறில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள மலர் அலங்காரங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக மூணருக்கு சுற்றுலா பயணிகள் வருவது பெருமளவு குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மூணாறு இயல்பு நிலைக்கு திருப்பி விட்டது என்பதை அறிவிக்கும் விதமாக மூணாறில் மலர் கண்காட்சி துவங்கப் பட்டுள்ளது. கேரளா ஹைடல் சுற்றுலா துறையும், குமுளி மன்னதார கார்டன்ஸ் இணைந்து நடத்தும் இந்த மலர்கண்காட்சியை
ஜனவரி 31-ம் தேதி வரை நடத்துகின்றன.

இந்த மலர் கண்காட்சியில் தாய்லாந்து, சீனா, பூடான் போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படும் பூக்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வண்ணங்களில் இடம் பெற்றுள்ள பூக்கள் பார்வையாளர்களை கவர்ந்து வருவதால் மலர் கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளன.

Exit mobile version